தமிழ் சினிமாவில் "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் மூலம் பிரபலமானவர் கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த், கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய யாஷிகாவிடம், சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யாவை பிடிக்குமா என கேட்டுள்ளார். இந்தக் கேள்விக்கு பதிலளித்த  யாஷிகா ஆனந்த் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக பதிலளித்துள்ளார்.

யாஷிகாவின் பதிலால் கடுப்பான ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா? என கழுவி கழுவி ஊத்துகின்றனர்.