பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதனால் ஒவ்வொரு நாளும், போட்டியாளர்களுக்கு மிகவும் கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் நேற்றைய தினம், பிக்பாஸ் அனைத்து போட்டியாளர்களிடமும் யாரை காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறீர்களோ, அவர்களுக்காக ஒரு பச்சை மிளகாய்யை சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் கூற, போட்டியாளர்கள் இந்த கார சாரமான டாஸ்க்கையும் செய்து முடித்து தான் விரும்பும் போட்டியாளர் ஒருவரை காப்பாற்றினர். 

அதை தொடர்ந்து இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக்பாஸ் வீட்டிற்குள் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்களான மஹத் மற்றும் யாஷிகா ஆகியோர் வந்துள்ளனர். இவர்களை பார்த்ததும் ஷாக் ஆனா  ஹவுஸ் மேட்ஸ், பின் அவர்கள் இருவரையும் ஆனந்தமாக வரவேற்கும் காட்சி வெளியாகியுள்ளது. இருவரும் போட்டியாளர்களை நன்கு விளையாடுமாறு அறிவுரை கூறும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள மஹத், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய போது, பிராச்சி என்ற காதலி வெளியில் இருந்த போதும், பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகாவை காதலித்து சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

எனினும் தற்போது இருவரும் தங்களுடைய காதலை மறந்து நண்பர்களாக இருக்கிறார்கள். விரைவில் இவர்கள் இணைந்து நடித்துள்ள படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.