பிக் பாஸ் வீட்டை விட்டு மகத் வெளியேறிய பிறகு ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவிற்கு வருத்தம் அதிகமாகி இருக்கிறது. அதிலும் இவர்கள் மீது அதிருப்தியில் இருக்கும் சக போட்டியாளர்கள் அனைவரும் இவர்களை கண்டுகொள்வது கூட இல்லை. இதனால் கடுப்பான் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இப்போது மாறி இருக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகி இருக்கும் பிரமோவின் போது ஐஸ்வர்யாவிடம் தனது திட்டங்கள் என்ன என்பதை தற்போது கூறி இருக்கிறார் யாஷிகா. நாம மகத் பக்கம் இருந்ததால இப்போ எல்லாரும் நம்ம கிட்ட ஒதுங்கி இருக்கறாங்க என கூறி இருக்கிறார். மேலும் அவர் பேசும் போது இனி நாம நல்ல விளையாடனும், உங்க டீம் ல நீ பெஸ்ட்னு அவார் வாங்கனும். எங்க டீம்ல நான் பெஸ்ட்னு ஆகனும் எனவும் ஐஸ்வர்யாவிடம் கூறி இருக்கிறார்

இதற்கு ஆமாம் என கூறி இருக்கும் ஐஸ்வர்யா அவங்க ரெண்டு பேரும் தான் போய்ட்டாங்க அவங்களுக்கும் சேர்த்து இனி நாம விளையாடனும் என்றும் கூறி இருக்கிறார். அவர் இவ்வாறு கூறி இருப்பது மகத் மற்றும் ஷாரிக்கை தான் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

இந்த பிரமோவில் இவர்கள் இப்படி ஒருபக்கம் திட்டம் போட்டு கொண்டிருக்கும் போது இன்னொரு பக்கம் மற்றபோட்டியாளர்கள் மிகவும் சந்தோஷமாக சிரித்து கொண்டிருப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

 

இதனால் இனி ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளர்களால் ஒதுக்கப்படுவார்கள் என்பது போன்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. இதனால் இனி என்னவெல்லாம் நடக்க போகிறது என நிகழ்ச்சியின் போது தான் தெரியவரும்.