‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வந்த பலரும் அவரவர் தகுதிக்கு ஏற்ப வாய்ப்புகளை அறுவடை செய்து விட்டார்கள். அழகும் திறமையும் இருந்தும் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் அம்போவென போனது யாஷிகாவும், ஓவியாவும் தான். 

இருவருமே இந்த புகழை வைத்துக் கொண்டு பெரிய படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டார்கள். அதுவும் யாஷிகாவுக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வந்தும், யோகிபாபு மாதிரி காமெடியன்களுடன் ஒரு பாடலுக்கு ஆடப் போனதன் விளைவு? நல்ல நல்ல வாய்ப்புகளுடன் வந்தவர்களும் தலைதெறிக்க ஓட்டம் பிடித்து வருகிறார்கள்.

 

யோகிபாபுவுடன் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜான்ரா இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற ஒரு படத்தில் யோகிபாபுவுடன், யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். ‘குறும்பு’ வகையாக இந்தப்படம் யாஷிகாவுக்கு பெரும் ஹீரோக்களுடன் வாய்ப்பு கிடைக்காத நிலையை உருவாக்கி விடும் என்கிறார்கள். பிஸியாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா இந்திர லோகத்தில் ந.அழகப்பன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு ஸ்ரேயாவுக்கு ஏற்பட்ட நிலைமை ஊரே அறிந்த ரகசியம் தான்.