wrong plastic surgery girl change aliyan
பொதுவாகவே பல இளம் பெண்களுக்கு திரையில் தோன்றும் கதாநாயகிகள் போல மாற வேண்டும், அல்லது தன்னுடைய அழகை இன்னும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக எத்தனை லட்சம் ஆனாலும் பரவாயில்லை எனும் மன நிலையும் சிலருக்கு உண்டு.

கோலிவுட் பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா, ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகைகள் கூட தங்களை அழகு படுத்திக்கொள்ள முகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டு தங்களுடைய அழகை மேற்கேற்றிக் கொண்டனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 
இதே போல ஈரான் நாட்டைச் சேர்ந்த சஹர் தாபார் என்கிற பெண் பாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் மிகத் தீவிர ரசிகையாம், இதனால் ... தன்னையும் ஏஞ்சலினா ஜூலி போல் மாற்றிக்கொள்ள வேண்டும் என கிட்டத் தட்ட முகத்தில் மட்டும் 50 முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார்.
மேலும் தீவிர டயட் மேற்கொண்டுள்ளார். தற்போது இவருடைய முகம் முற்றிலும் சேதமடைந்து வேற்று கிரக வாசி போல் மாறியுள்ளது. 19 வயதே ஆகும் இந்தப் பெண் 60வயதுப் பெண்ணின் முகம் போல் மாறியது மட்டுமின்றி மிகவும் கொடூரமாகவும் மாறியுள்ளது.

இவருக்கும் இவருடைய காதலர் ரோஷனுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் ஆக உள்ள நிலையில் இவர் இது போல் தோற்றமளிப்பது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏஞ்சலினா போல் மாற விரும்பிய இவர் தன்னுடைய நிலையை... இன்ஸ்டா கிராமில் பகிர்ந்துள்ளார்... ஆனால் நெட்டிசன்கள் பலர் இவருக்கு எதிராக தான் கருத்து தெரிவித்து வருகின்றனராம்.

அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் மிகவும் அழகாக இருந்த இவர் இப்படி காட்சியளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
