Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி தனது கதையை திருடி விட்டதாக கூறிய பாடலாசிரியர் பி.கே.முத்துசாமி காலமானார்...!

'வெண்பா கவிஞர்' என திரையுலகினராலும், மக்களாலும் கொண்டாடப்படும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான பி.கே.முத்துசாமி, வயது மூப்பு காரணமாகவும், உடல் நல பிரச்சனை காரணமாகவும் அவதி பட்டு வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல்லில் காலமானார். 
 

writer pk muthusamy death in namakal
Author
Chennai, First Published Aug 11, 2020, 11:59 AM IST

'வெண்பா கவிஞர்' என திரையுலகினராலும், மக்களாலும் கொண்டாடப்படும், பாடலாசிரியரும், எழுத்தாளருமான பி.கே.முத்துசாமி, வயது மூப்பு காரணமாகவும், உடல் நல பிரச்சனை காரணமாகவும் அவதி பட்டு வந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நாமக்கல்லில் காலமானார். 

96 வயதாகும் இவர், மருதநாடு இளவரசி படத்தின் கதையை... மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன்னிடம் இருந்து திருடிவிட்டதாக குற்றம் சாட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

writer pk muthusamy death in namakal

தமிழில் கிட்ட தட்ட 60 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள பி.கே.முத்துசாமி  காவேரியின் கணவன் படத்தில் இடம்பெற்ற சின்னநடை நடந்து வா, பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.  'தை பிறந்தால் வழி பிறக்கும்' படத்தை தயாரித்து தன்னுடைய சொத்து முழுவதையும் இழந்தார்.

பி.கே.முத்துசாமியின் மகன் ஒரு ஒளிப்பதிவாளர் ஆவர். 2003 ஆம் ஆண்டு, தன்னுடைய மனைவியை இழந்த பின், மீண்டும் நாமக்களுக்கே சென்ற அவர்... அங்கு வாடகை வீட்டில் தான் வசித்து வந்தார். 

writer pk muthusamy death in namakal

இவர் படைப்பில் உருவான புத்தகங்களின் உரிமையை கூட, சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு வழங்கிய இவர், கடைசி வரை தனக்கு அரசால் வழங்கப்பட்ட ரூ.1500 பணத்தை கொண்டே வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இவர் எம்.ஜி.ஆர், அண்ணா துறை, ஜெயலலிதா உள்ளிட்ட பலரை பற்றி புகழ்ந்து பாடியுள்ளார். இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios