சந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் ஆர்யா சாயிஷா நடித்த காமெடி கலந்த குடும்ப படமாக தயாராகி வருகிறது கஜினிகாந்த். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில், பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக கபிலன் வைரமுத்து,கு.கார்த்திக்,பாபா பாஸ்கர், தயாரிப்பாளர் அபினேஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்

இந்த நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் கபிலன் பேசும் போது,

நான் இசை அமைப்பாளர் பால முரளி உடன் ஏற்கனவே பணியாற்றி  உள்ளேன்...அவருடன் இணைந்து  விமன்ஸ் ஆந்தம், பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டு உள்ளோம்..இந்நிலையில், இந்த படத்திற்காக அவருடன் இணைந்து ஒரு பாடலை எழுதி உள்ளேன் என அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும், நான் ஆர்யாவின் ரசிகன்....எனவே ஆர்யாவிற்கு என்னுடைய கோரிக்கையை வைக்கிறேன்..தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்படும் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன் - 2 நடத்தினால், அந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கு பெற கூடாது....எங்க வீட்டு மாபிள்ளையாக இருப்பதை விட ,ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம் என பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து தெரிவித்து உள்ளார்