Asianet News TamilAsianet News Tamil

’2.0 வெளிவந்தபின்னரும் சர்கார் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது’ ஜெயமோகனின் புதுகுண்டு


இந்த ஆண்டில் தமிழின்  முதன்மையான வெற்றிப்படங்கள் என்றால் அது, தான் வஜனம் எழுதிய ‘சர்கார்’ மற்றும் ‘2.0’ தான் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். தான் எழுதுகிற படங்களுக்கு அவர் தரைமட்டம் வரை இறங்கி பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் எதிர்காலத்தில் படங்களுக்கு பி.ஆர்.ஓ. வாகவும் பணியாற்றத் துவங்கி ஏற்கனவே தொழிலில் இருப்பவர்களை துரத்திவிடுவாரோ என்கிற அச்சம் ஏர்படுகிறது.

writer jeyamohan declars 2.0 is a big hit
Author
Chennai, First Published Dec 6, 2018, 10:03 AM IST

இந்த ஆண்டில் தமிழின்  முதன்மையான வெற்றிப்படங்கள் என்றால் அது, தான் வஜனம் எழுதிய ‘சர்கார்’ மற்றும் ‘2.0’ தான் என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். தான் எழுதுகிற படங்களுக்கு அவர் தரைமட்டம் வரை இறங்கி பிரச்சாரம் செய்வதைப் பார்த்தால் எதிர்காலத்தில் படங்களுக்கு பி.ஆர்.ஓ. வாகவும் பணியாற்றத் துவங்கி ஏற்கனவே தொழிலில் இருப்பவர்களை துரத்திவிடுவாரோ என்கிற அச்சம் ஏர்படுகிறது.writer jeyamohan declars 2.0 is a big hit

இதோ அவரது பதிவு...பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக்கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.writer jeyamohan declars 2.0 is a big hit

 இந்தியவரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான்.ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறுகோடியை தாண்டிவிட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தைவிடஒரு மடங்குக்குமேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட  இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன்பின்னர்தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்தபின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மைவெற்றிப்படங்கள் இவைதான்.writer jeyamohan declars 2.0 is a big hit

 இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம்.  உலகமெங்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.writer jeyamohan declars 2.0 is a big hit

 இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில்கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன. வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச்செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப்பார்க்கவேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ளவேண்டும்.

Follow Us:
Download App:
  • android
  • ios