‘சர்கார்’ படத்தில் ஒரு கார்ப்பரேட் கிரிமினலாக வரும் விஜய்க்கு இலக்கியமேதை சுந்தரராமசாமியின் பெயரைச் சூட்டியதன் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கே மாபெரும் துரோகம் இழைத்துவிட்டார் எழுத்தாளர் ஜெயமோகன் என்றும் அவர் காசுக்காக கார்ப்பரேட்களின் கைக்கூலி ஆகிவிட்டார் என்றும் இலக்கிய வட்டாரங்களில் பெரும்புகைச்சல் கிளம்பியுள்ளது.

யார் இந்த சுந்தர ராமசாமி என்று தொடங்கி அடுத்த மூன்று பத்திகளில் இடம்பெறப்போகும் செய்திகள் செம போரடிக்கும் என்பதால்,தப்பி ஓடி, அருகே இடம்பெற்றிருக்கும்... தொடர்ந்து ஹீரோக்களை கவிழ்த்துவரும் கீர்த்தி சுரேஷ் செய்திக்கு ஷிஃப்ட் ஆகிவிடவும்.

யார் இந்த சுந்தர ராமசாமி?  இவர் எழுதிய முதல் நாவலான ‘ஒரு புளிய மரத்தின் கதை’ அடுத்த புளியமரம் வரை கூட எட்டாமல் இருக்க, இரண்டாவது நாவலான ‘ஜே.ஜே.சில குறிப்புகள்’ மூலம் மொத்த தமிழ் இலக்கிய உலகையும் ஒரே நாலில் கவர்ந்தவர் ஜெயமோகனின் ஆசானான இந்த ராமசாமி. அடுத்து ‘குழந்தைகள் ஆன்கள் பெண்கள்’ என்கிற மூன்றாவது நாவலோடு தனது நாவல் பணியை முடித்துக்கொண்ட சுமார் 75 சிற்கதைகள் வரை எழுதியிருக்கிறார். பசுவைய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகளும் ஏராளமான விமர்சனக் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார்.

அக்டோபர் 14, 2005ம் ஆண்டுகாலமான சுந்தரராமசாமி தன் வாழ்நாளில் சினிமாவை, அதுவும் தமிழ்சினிமாவை அடியோடு வெறுத்தவர். அப்படிப்பட்டவருக்கு தன்னை அவரது சிஷ்யன் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயமோகன் இப்படி ஒரு துரோகத்தைச் செய்யலாமா என்கிறது அவருக்கு எதிராக முழங்கிவரும் இலக்கிய கோஷ்டி.