world wide movies stopped

 இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வெளிவர தயாராக இருக்கும் திரைப்படம் பத்மாவதி. இந்த படத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஒரு சில அமைப்பை சேர்ந்தவர்கள் படத்தை வெளியிட கூடாது என்று கூறி வருகின்றனர்.

மீறி படத்தை வெளியிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் திரைப்படம் வெளியாகும் திரையரங்கங்கள் தீ யிட்டு கொளுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்.

இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக திட்டமிட்டபடி, இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த படத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் இன்று 15 நிமிடன் அதாவது மாலை 4:15 மணி முதல் 4:30 வரை படபிடிப்பு நிறுத்தப்படும் என அறிவித்துள்ளனர்.