யாஷ் ரசிகர்கள் உருவாக்கிய பிரமாண்ட போஸ்டரானது உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. ரசிகர்கள் உருவாக்கிய வீடியோவை நடிகர் யாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிளாக்பஸ்டர் ஹிட்டான KGF :
கடந்த 2018-ம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் KGF. தங்க சுரங்கத்திற்காக அடிமையாக்கப்பட்ட மக்களின் குரலாக வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. அதோடு அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பையும் விதைத்தது.
பல ஆண்டு இடைவேளைக்கு பிறகு 2-ம் பாகம் :
பிரசாந்த் நீல் இயக்கியுள்ள இரண்டாம் பாகம் கடந்த 14-ம் தேதி வெளியானது. இப்படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் ரவீனா டண்டன், மாளவிகா அவினாஷ், பிரகாஷ் ராஜ், சரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

பான் இந்திய மூவியாக வெளியான KGF 2 :
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்க, புவன் கவுடா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக உலகம் முழுவதும் இந்த படம் வெளியானது.
திரையரங்கை ஆக்கிரமித்த KGF 2 :
தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் KGF 2 அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதோடு உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களுக்கு மேல் இந்த படம் திரையிடப்பட்டுள்ளது.அதோடு வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
உலக சாதனையில் யாஷ் ரசிகர்கள் :
இந்நிலையில் புதிய உலக சாதனை ஒன்றை புரிந்துள்ளனர். அதாவது 25 ஆயிரத்து 650 சதுர அடியில் யாஷின் போஸ்டரை உருவாக்கியுள்ளனர் அகில கர்நாடக ராக்கிங் ஸ்டார் யாஷ் ரசிகர்கள் சங்க உறுப்பினர்கள். 25,650 சதுர அடி பரப்பளவில் 2,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்டு, 135×190 அடியில் போஸ்டரை உருவாக்கி உள்ளனர். இந்தப் போஸ்டரானது உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை யாஷ் ட்வீட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
