மார்வெல்  ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் படங்கள் ஏப்போதுமே, பார்க்கும் ரசிகர்களை பிரமிக்க வைப்பதோடு, சூப்பர் ஹீரோசை நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தும் படங்களாக அமையும்.

அந்த வகையில் அனைத்து சூப்பர் ஹீரோசை ஒருங்கிணைத்து வெளியான வைத்து தி அவெஞ்சர்ஸ் படத்தின் முதல் பாகம் 2012 யில் வெளியானது. அதை தொடர்ந்து, Avengers: Age of Ultron" திரைப்படம், 2015  ஆம் ஆண்டு வெளியானது.

பின் Avengers: Infinity வார் 2018  ஆம் ஆண்டு வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. இந்த படத்திற்கு பின் இந்த ஆண்டு வெளியான Avengers: Endgame (2019) படம் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தது.  இந்த வருடத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு உரிய படமாக இது இருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் Avengers: Endgame படத்தில் ironmanக்கு  தமிழ் டப்பிங் நடிகர் விஜய்சேதுபதி குரல் கொடுத்தார்.

இதற்கு தமிழ் ரசிகரகள் மத்தியில் சில விமர்சனங்களும் எழுந்தது. ஆரம்பத்திலிருந்து Avengers: Endgame வசூலை அள்ளிய 11 நாட்களில் 21 ஆண்டுகளுக்கு மேலாக வசூல் இரண்டாவது இடத்தை பிடித்து. இதற்கு முன் டைட்டானிக் படத்தின் சாதனையை முறியடித்தது இதற்கு டைட்டானிக் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் அவெஞ்சர்ஸ் குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் 

அடுத்து வசூலில் முதல் இடத்தில் இருக்கும் அவதார் சாதனையை முறியடிக்குமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவியது 

இதற்கு முன் அவதார் படம் உலகம் முழுவதும் 19 ஆயிரத்து 210 கோடி வசூலித்து முதலிடத்தில் இருக்கிறது.  ஆனால் தொடர்ந்து Avengers: Endgame வசூல் குறைந்து அவதார்ரை முந்த முடியாமல் பின் தங்கியது இந்த நிலையில் Avengers: Endgame படத்தை சமீபத்தில் மீண்டும் மறு ரிலீஸ் செய்தனர்.  ஆனால் தமிழ்நாட்டில் வெளிய ஆக வில்லை  இதில் புதிதாக சில காட்சிகளை இணைத்து இருந்தார்கள் இரண்டாவது தடவை வெளியாகியது Avengers: Endgame  அவதார் படம் வசூலை முறியடித்து முதலிடத்தை பிடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது இதனைகுறித்து  படத்தின் தயாரிப்பாளர் கெவின் பீஜ் தெரிவித்துள்ளார் ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.