குடும்ப வன்முறையில் சிக்கும் பெண்களுக்கு உதவ வேண்டும்' என, நடிகை வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

T.Balamurukan

கொரோனா தொற்றால் நாடே ஊரடங்கில் முடங்கி கிடக்கிறது. வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் மக்கள் இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் சண்டை சச்சரவு காரணமாக பெண்கள், குழந்தைகள் தாக்கப்படுவதாக புகார் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் இதுகுறித்துத் தகவல் தெரிவித்துள்ளது. மாநில மகளிர் ஆணையமும் அறிக்கை வெளியிட்டு கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தநிலையில், குடும்ப வன்முறையில் சிக்கும் பெண்களுக்கு உதவ வேண்டும்' என, நடிகை வரலட்சுமி சரத்குமார் டுவிட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Scroll to load tweet…

எல்லாருக்கும் வணக்கம். பெண்கள் பலர் குடும்ப வன்முறையில் அனுபவித்து வருகிறார்கள். ஊரடங்கு காலத்தில் அப்பெண்கள் தப்பிக்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். வீட்டில் மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்கான உதவி எண் இது 1800 102 7282. தயவு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த எண்ணை மற்றவர்களுக்கு தெரியாமல் கொடுத்து உதவுங்கள். பாதிக்கப்படுபவர்களில், வசதியான, செல்வாக்கு மிக்கவர்கள், படித்தவர்கள், படிக்காவதவர்கள் என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். கவலை வேண்டாம். அகில இந்திய அளவில் செயல்படும் இந்த எண்ணை உதவிக்கு அழைக்கலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.