Women MLA wish the Director Bramha

இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் 'மகளிர் மட்டும்' . இந்தப்படத்தில் '36 வயதினிலே' திரைப்படத்திற்குப் பிறகு ஜோதிகா முகமும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

80களில் கதாநாயகிகளாக நடித்த சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் பெண்கள் மத்தியில் அதீத வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இப்படம் குறித்து எம்.எல்.ஏ பாலபாரதி கூறியிருப்பதாவது: ‘‘யார் அந்த பிரம்மா? படம் மிக மிக அருமை, என தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

நான் பல ஆண்டுகள் பேசியும் யாருக்கும் புரியவில்லையே என நினைத்திருந்த பெண்ணியக் கருத்தை மிகுந்த எதார்த்தத்தோடு சித்திரித்திருந்தீர்கள். நல்ல கருத்தோடு அமைந்த நல்ல படம். அனைத்துப் பெண்களும் பார்க்கக்கூடிய படம் என இயக்குனர் பிரம்மா உட்பட படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.