கன்னட திரையுலகை சேர்ந்த பெண் இயக்குனர், தன்னுடைய நீண்ட நாள் காதலரை, மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள். 

கன்னட திரையுலகை சேர்ந்த பெண் இயக்குனர், தன்னுடைய நீண்ட நாள் காதலரை, மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரின் புகைப்படங்கள் வெளியானதும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை இந்த தம்பதிகளுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கன்னட திரையுலகில் பிரபல இயக்குனராக அறியப்பட்டவர் சுமனா கிட்டூர். இவர் குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே இயக்கி இருந்தாலும், அந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, இவர் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான Kallara Santhe திரைப்படம் சிறந்த கன்னட திரைப்படத்திற்கான ஜூரி விருதை பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கிய, Edegarike , சிறந்த கன்னட திரைப்படம் மற்றும் பல்வேறு விருதுகளை பெற்றுது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் சுமனா கிட்டூர் பல வருடங்களாகவே, புகைப்பட கலைஞர் ஸ்ரீனிவாஸ் என்பவரை காதலித்து வந்தார். பெற்றோர்களும் இவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து இவர்களுடைய திருமணம் ஏப்ரல் மாதம், சிவமோகவில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், திடீர் என கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால், இவருடைய திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் மே 24 ஆம் தேதி, குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக புதுச்சேரியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக வெளியான இவர்களுடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் பலர் தொடந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.