லெஜெண்ட் சரவணா ஸ்டோர் அருள் அண்ணாச்சி மீது யார் கண் பட்டதோ..? நயன்தாராவும் உடன் நடிக்க மறுக்கிறார் என்கிற கடுப்பில் இருந்தவரை தேடிப்போய் கடுப்படித்து இருக்கிறார்கள் வேற்று மதத்தை சேர்ந்த சிலர்.  

சரவணா ஸ்டோர் விளம்பரங்களை போலவே சரவணா ஸ்டோர்ஸும் ஆங்காங்கே பிரம்மாண்டமாய் கிளைகளை பரப்பி வருகிறது.  அருள் அண்ணாச்சியின் ரசிகர்கள்  அவரது கடைகளுக்கு படையெடுக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு இது பொறுக்கவில்லை. நயன்தாராவை ஜோடிபோடக் கேட்டதாலோ என்னவோ அவரது மதத்தை சேர்ந்தவர்கள் அண்ணாச்சியில் பல்லாவரம் கிளைக்கு அணி வகுக்க தொடங்கி இருக்கிறனர். 

கடை நிர்வாகிகளை சந்தித்த அவர்கள், ‘’பல்லாவரம் பகுதிகளில் எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கிறோம்.  மாற்று மதம் பார்க்காமல் அண்ணாச்சி கடையை தேடி வந்து பொருள்களை வாங்குகிறோம். ஆனால் உங்கள் குரோம்பேட்டை கடையின் வாசலில் பிள்ளையார் கோவில் அமைந்திருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை. எடுத்துவிடுங்கள். இல்லை என்றால் கடைக்கு எங்கள் மதத்தை சேர்ந்தவர்கள் யாரும் வரமாட்டோம்’’என பணிவு கலந்த எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். 

இந்தத் தகவல்கள் சினிமாவுக்கு பிஸியாக தயாராகிக் கொண்டிருக்கும் அருள் அண்ணாச்சியின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. பெயரிலேயே அருளையும், கடவுள் பெயரில் கடையையும் வைத்துள்ள அண்ணாச்சி ஒப்புக் கொள்வாரா..? ‘’நானும் எங்கள் குடும்பமும் முன்னேற்றத்திற்கு காரணம் எங்கள் கடவுள் பக்தி, எவ்வளவு உயரம் சென்றாலும் எப்போதும் எங்கள் குடும்பம் கடவுளுக்கு பணி செய்து கொண்டேதான் இருக்கும், கோவிலை எடுத்துதான் அப்படி ஒரு வியாபாரம் வரும் என்றால் அப்புடி ஒரு வருமானமே தேவையில்லை’’எனக் கறாராக சொல்லி விட்டார்.


 இதனால் பல வகைகளிலும் அந்த மதத்தை சேர்ந்த சிலர் தொடர் மிரட்டல் விடுத்து வருவதால் சரவணா ஸ்டோர் நிர்வாகம் சார்பாக  இது குறித்த புகார் குரோம்பேட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.