why vijay award stoped

பிரபல விருது விழாக்களுக்கு நிகராக, வருடம் தோறும் விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்படும் 'விஜய் அவார்ட்ஸ்' ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சி என்று கூறலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தற்போது 10வது ஆண்டில் விஜய் தொலைக்காட்சி அடியெடுத்து வைப்பதையொட்டி இந்த வருடம் விருது வழங்கும் விழாவை மிகவும் கோலாகலமாக நடத்த நிறுவனத்தினர் திட்டமிட்டிருந்தனராம்.

அதன்படி (மே 26) அதாவது நேற்றைய தினம், இந்த விழா சென்னையில் நடைபெற இருந்தது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், தமிழகம் முழுவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதால், இது கொண்டா வேண்டிய தருணம் இல்லை என எண்ணி இந்த நிகழ்ச்சியை தற்போது தள்ளி வைத்து விட்டனராம் தொலைக்காட்சி நிறுவனத்தினர்.

விரைவில் இந்த நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்கிற தகவல் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்க்கனவே இந்த நிகழ்ச்சியை டிடி, கோபிநாத், மா.கா.பா ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.