சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள், சௌந்தர்யா மற்றும் அவருடைய முதல் கணவர் அஸ்வின் இருவரும் மனம்முவந்து விவாகரத்து பெற்று பிரிய விரும்புவதாக சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

முன்னாள் கணவர் அஸ்வின் - சௌந்தர்யா இடையே, சிறிய பிரச்சனை மட்டுமே இருந்ததாக முதலில் கூறப்பட்ட நிலையில், அதனை சரி செய்ய அவருடைய குடும்ப உறுப்பினர்கள் முயற்சி செய்தும் கடைசியில் அது தோல்வியில் தான் முடிந்தது. 

அஸ்வினை விட சௌந்தர்யா விவாகரத்து விஷயத்தில் மிகவும் உறுதியாக இருந்ததால், இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களின் மகன் வேத் தற்போது சௌந்தர்யாவிடமே வளர்கிறார்.

விவாகரத்து பெற்ற பின் சௌந்தர்யா தன்னுடைய வேளைகளில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், தொழிலதிபர் விசாகன் என்பவருக்கும் சௌந்தர்யாவிற்கும், மிகவும் பிரமாண்டமாக இரண்டாம் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்தது தான்.

இந்நிலையில், தற்போது சௌந்தர்யா அவருடைய முன்னாள் கணவர் அஸ்வினை பிரிய காரணம் சௌந்தர்யாவின் அதிகப்படியான கோபம் தான் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சௌந்தர்யாவின் கோபத்தை குறைத்து கொள்ளும் படி பலமுறை ரஜினிகாந்த் கெஞ்சியுள்ளார். ஆனால் அதனை சற்றும் பொருட்படுத்தாமல், எதுக்கெடுத்தாலும் இவர் கோபப்பட்டு கொண்டேனா இருந்தது தான் இவர்கள் பிரிய முதல் காரணம் என கூறப்படுகிறது.

இதனால் வந்த பிரச்சனைகள், தான் பின் பெரிதாகி... பெரிதாகி... ஒரு நிலையில் விவாகரத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது. சௌந்தர்யாவின் கோபம் தான், விவாகரத்துக்கு காரணம் இதுவரை வெளியாகாத ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை சற்று அதிர்ச்சியாக்கியுள்ளது.