இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடந்த நிலையில், ஒவ்வொரு போட்டியாளர்களின் சொந்த பந்தங்கள், குழந்தைகள், மற்றும் அவர்களுடைய நண்பர்கள் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்தனர். 80 நாட்களுக்கு மேலாக, பார்த்த முகங்களையே பார்த்து கொண்டு, சண்டை, பிரச்சனை என சென்று கொண்டிருந்த பிக்பாஸ் வீடு, எமோஷ்னல் களமாக மாறி காட்சியளித்தது.

மற்ற பிரபலங்களை விட, நடிகர் கவின் வீட்டில் இருந்து அவரை பார்க்க யார் வருவார்கள் என்கிற ஆர்வம் அனைவருக்குமே அதிகமாக இருந்தது. கவினை பார்க்க உள்ளே வந்தது அவருடைய நண்பர் தான். 

நண்பனை பார்த்த சந்தோசம் கவின் முகத்தில் இருந்தாலும், தன்னை பார்க்க சொந்த பந்தங்கள் யாரும் வரவில்லையே என்கிற ஏக்கத்தையும் பார்க்கமுடிந்தது.    

 

கவினுடன் நன்றாக பேசிவிட்டு, கடைசியாக அவர் கிளம்பும் போது கவின்  கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார். ஏன் அறைந்தேன் என்பதற்கு காரணம் சொல்லாமல். இந்த அறையை, நீ வெற்றி பெற்று மேடையில் வந்து பேசும் போது, என்னை அனைவர் முன்பும் அறை நான் வாங்கி கொள்கிறேன் என்று விடைபெற்றார். 

இந்நிலையில் கவினை அறைந்தது ஏன் என ஒரு பேட்டியில்  மனம் திறந்து கூறியுள்ளார் கவினின் நண்பர். இந்த பேட்டியில்,  ‘கவினுக்கு அவனுடைய அம்மா வெளியே எப்படி இருக்கிறார் என்று தெரியாது. அவர்கள் எனக்கும் அம்மா மாதிரி தான், இவன் செய்யும் சில வேலைகளால் அவர்களையும் சேர்த்து திட்டுகிறார்கள் சிலர். இந்த காரணத்தை நான் இப்போது அவனிடம் சொல்ல முடியாது என்பதால் தான் காரணம் சொல்லாமல் அறைந்தேன் என கூறியுள்ளார்.