பிரபல இயக்குனர் பி. வாசு இயக்கத்தில், கடந்த 2005 ஆம் ஆண்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், உள்ளிட்ட பலர் நடிப்பில், வெளியான திகில் திரைப்படம் 'சந்திரமுகி'.

இப்படத்தில் தலைவர் ரஜினிகாந்த், வேட்டையனாகவும், மனநல நிபுணர் சரவணனாகவும்... நடித்து மிரட்டி இருப்பர். அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்த இந்த படத்தில், இடம்பெற்ற அணைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

மேலும் இந்த படத்தில், நடிகர் வடிவேலுவுடன் ரஜினிகாந்த் செய்த காமெடி காட்சிகள் சான்ஸே இல்லை.... ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பை பெற்றது.

கடந்த சில வருடங்களாகவே... இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வந்தார் பிரபல இயக்குனர் வாசு. மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிப்பார் என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமீபத்தில் வெளியான தகவலின் படி, இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு பதில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும், இந்த படத்திற்காக வாங்கிய தொகை முழுவதையும் அவர் கொரோனா நிதிக்காக வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இதை தொடர்ந்து, சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் ஏன் , ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்கிற ஒரு கேள்வி அனைவர் மனதிலும் இருந்தது.

இந்நிலையில் இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இரண்டாம் பாகத்திற்காக பி.வாசு சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்பதாலும், இளம் இயக்குனர்கள் இயக்கத்திலேயே அதிகம் ரஜினி நடிக்க ஆசைப்படுவதாலும் இந்த படத்தில் நடிப்பதை அவர் தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.