நடிகை ஓவியா பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவருக்கு கோடி கணக்கான ரசிகர்கள் பெருகியுள்ளனர். பிக் பாஸ்ஸில் ஓவியா பேசிய வார்த்தைகளை வைத்தே பாடல் எழுதும் அளவிற்கு இவர் பிரபலமும் ஆகிவிட்டார்.

தற்போது மனஅழுத்தம் காரணமாக, இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி திரைப்படங்களில் தன்னுடைய கவனத்தை செலுத்த தொடங்கியுள்ள இவர், தன்னுடைய ரசிகர்களுக்காக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதில் நான் ஏன் என்னுடைய முடியை வெட்டினேன் என பல கரணங்கள் சொல்லப்படுகிறது. உண்மையில் நான் முடி வெட்ட காரணம் "கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்வதற்காக கொடுப்பதற்கு தான் என கூறி அனைவரையும் நெகிழ செய்துள்ளார்.