பிக்பாஸ் சீசன் 3 , நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய 16 போட்டியாளர்களின் ஒருவர் ஜாங்கிரி மதுமிதா. முதல் வாரத்தில் இருந்தே இவரை சில போட்டியாளர்கள் டார்கெட் செய்து தொடர்ந்து நாமினேட் செய்து வந்தாலும், மக்கள் இவரை காப்பாற்றி வந்தனர்.

மேலும், இவர் நடந்து கொள்ளும் விதம் மக்களுக்கு பிடித்து போனதால், கண்டிப்பாக இறுதி போட்டியில் நுழைவார் என, எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.

ஹெலோ ஆப் நடத்திய டாஸ்க் ஒன்றில், காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து மதுமிதா தன்னுடைய கருத்தை கூற, இதனை ஷெரின் உள்ளிட்ட போட்டியாளர்கள் மிக பெரிய பிரச்சனையாக மாற்றினர். ஒரு கட்டத்தில் கோவம் தலைக்கு ஏறி, மதுமிதா பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து தன்னை தானே தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் பிக்பாஸ் வீட்டின் விதியை மீறி விட்டதாக கூறி, மதுமிதா போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதை தொடர்ந்து சம்பள பிரச்சனை விவகாரம் குறித்து, விஜய் டிவி தொலைக்காட்சிக்கு மிரட்டல் விடுத்ததாக நிகழ்ச்சியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின் இந்த பிரச்சனை ஓய்ந்தது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து, வெளியேறிய பின் கையில் ஏற்பட்ட காயத்திற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார் மது.  இந்நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிற்கு, பேட்டி கொடுத்த போது... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏன் தாலி அணியாமல் சென்றேன் என்பது குறித்து முதல் முறையாக, கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல நான் தயாராகும் போது, என்னுடைய அனைத்து பொருட்களையும் நிகழ்ச்சி தரப்பில் இருந்து செக் செய்தனர். அப்போது தாலி மிகவும் பெரிய நகை என்பதால் அதனை கழட்டி விடுமாறு கூறியதே அவர்கள் தான்.

மேலும் மைக்கில் தாலி உரசும் என்பதும் ஒரு காரணம். முடியாது என நான் மறுத்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டிகள் வைக்கும் போது, யாரவது தாலியை இழுத்துவிட்டால் அது பெரிய பிரச்சனையாக மாறிவிடும் என கூறியபின், கணவரின் அனுமதியோடு தாலியை கழட்டியதாக இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் மது. இத்தனை நாள் மூடி மறைத்த உண்மையை தற்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.