Asianet News TamilAsianet News Tamil

பாராளுமன்றத்தில் ஏன் தேசியகீதம் கட்டாயமாக்கப்படவில்லை – அரவிந்தசாமி பளார்…

Why National Anthem is not Enacted in Parliament - Aravindasamy Palar ...
Why National Anthem is not Enacted in Parliament - Aravindasamy Palar ...
Author
First Published Oct 25, 2017, 10:08 AM IST


அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்கு ஏன் கட்டாயமாக்கப்படவில்லை என்று நடிகர் அரவிந்த் சாமி சௌக்கடி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்றாண்டு நவம்பர் மாதம், உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்ப வேண்டும் எனவும், அதற்கு அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்த முடிவை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்று கூறியது.

மேலும் ஜனவரி 9-க்குள் புதிய விதிகளை உருவாக்கவும் உச்சநீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியது.

இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி, “தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது நான் எழுந்து நின்று பாடுகிறேன், இதை நான் பெருமையாக கடைப்பிடிக்கிறேன். ஆனால், திரையரங்குகளில் மட்டும் எதற்கு தேசிய கீதம் ஒலிபரப்புவதைக் கட்டாயமாக்குகிறீர்கள்? என்பது புரியவில்லை.

அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை, பாராளுமன்றம் ஆகிய இடங்களுக்கு ஏன் கட்டாயமாக்கப்படவில்லை,” என தனது டிவிட்டரில் சௌக்கடி கேள்வி எழுப்பி உள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios