பிக் பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் ஒன்றில் டாஸ்க்குக்குப் பின் நடந்த விவாதத்தில் தன்னுடைய கருத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக மதுமிதா தனக்குத்தானே தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதால், இந்தச் செயல் பிக் பாஸ் வீட்டின் முக்கிய விதியை உடைத்து எறிவதாகும். இந்த அடிப்படையில் பிக் பாஸ் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டார். சர்ச்சைக்குரிய வகையில் வெளியேற்றப்பட்ட பின் காசை தரலன்னா தற்கொலை  செய்துகொள்வேன் என மிரட்டி , விஜய் டிவியின் போலீஸ் கம்பளைண்ட், தற்கொலை மிரட்டலும் விட்டுவிட்டு கம்பளைண்ட்க்கு காரணமே தெரியலன்னு சொல்லி, ப்ரஸ்மீட்ன்னு டிராமா போட்டு பேலன்ஸ் துட்டையும் வாங்கிவிட்டார்.  

தற்கொலை டிராமா போட்டு துட்டையும் வாங்கிகிட்டு,  பிக் பாஸ் நிகழ்ச்சியின்போது சக போட்டியாளர்கள் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல் கண்டிக்கவில்லை என்றும், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்  நசரத் பேட்டை போலீசில் தபால் மூலம் புகார் அளித்துள்ளார், இவ்வளவு நாள் சைலண்ட்டாக இருந்துட்டு திடீரென ஏன் கமலை மாற்றிவிட்டார் மது? 

சரியான காரணம் இருக்கு கடந்த வாரம் சசிக்கிழமை வழக்கம் போல பிக்பாஸ் போட்டியாளர்களுடன் உரையாடுவதற்கு முன்பு,  மதுமிதா இருக்கும்போது ஆண்கள் பெண்களை ஓவர் டாமினேட் பண்றாங்க என்று பெரியதொரு சண்டை போட்டு கோரா தாண்டவம் ஆடினதை மனதில் வைத்து, பேச்சை ஆரம்பித்த கமல். பெண்களை அப்படியெல்லாம் டாமினேட் செய்ய முடியாது,  இந்திய அளவில் பெண்கள் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்கள்.

உலக சாம்பியன்ஷிப்பில் பெண்கள் வென்றுகொண்டிருக்கிறார்கள். மானசி ஜோஷி, பி.வி. சிந்து, இளவேனில் வாலறிவன் ஆகியோர் தனிப்போட்டிகளில் வெல்கிறார்கள் எனக் கூறினார், கடைசியாக குழு விளையாட்டில்கூட அல்ல, தனித் திறனால் வென்று கொண்டிருக்கிறார்கள் பெண்கள் என அவர்களுக்குப் பாராட்டுகள்  சொல்லி வெளியேற்றப்பட்ட மதுவை காண்டாக்கியுள்ளார்.

இதுவரை விஜய் டிவிக்கும் மதுமிதாவுக்கும் இடையே நடந்து வந்த பிரச்சினையில், தற்போது கமலும் இழுக்கப்பட்டுள்ளார். போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் கமலோ அல்லது அவர் சார்பில் வழக்கறிஞரோ நிச்சயம் விளக்கம் சொல்லியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்போது பிக் பாஸ் வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் தெரிவித்தே ஆக வேண்டும்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை வாரம் 2 நாள் வந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவிட்டு செல்கிறார் கமல், அப்போது, போட்டியாளர்களின் நடவடிக்கைகள் குறித்து விமர்சிப்பதை மட்டுமே வைத்துள்ளார், மற்ற மொழி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் போல கண்டிப்பது இல்லை,என்னதான் தப்பு செஞ்சாலும் தடவிக்கொடுத்தே பேசி கலாய்ப்பது மட்டுமே வழக்கமாக வைத்துள்ளார். 

மற்றபடி அனைத்து விஷயங்களையும் முடிவு செய்வது பிக் பாஸ் நிகழ்ச்சி குழு மட்டுமே, அதற்கு வனிதாவின் ரீஎண்ட்ரி கூட, பிக் பாஸ் ரூல் புக் பக்கத்தில் உள்ளது தான். அக்ரிமெண்ட் போட்டபோதே மதுமிதா தெரிந்திருக்கும். மேலும், கமல் போன்ற உச்ச நடிகரை தேவையில்லாமல் ஏன் இப்படி வம்புக்கு இழுத்திருக்கிறார்? மொத்த துட்டையும் வாங்கிவிட்டு இப்படி போலீசில் வேறு கம்பளைண்ட் கொடுத்துள்ளார்? இதுபற்றி டிவி நிர்வாகம் விரைவில் அவர் மீது அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும் என தெரிகிறது.