நடிகர் விஜய் சேதுபதி அவ்வப்போது இந்து கடவுள் குறித்து சர்ச்சை தெரிவித்து வருவது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டு சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது பெண்கள் சபரிமலை முடிவை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

எதிர்ப்பை மீறி சபரிமலை செல்லும் பெண்களை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் நுழைய விடாமல் தடுத்து வந்தனர். இந்நிலையில் அப்போது நடிகர் விஜய்சேதுபதி இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ‘’ஒரு ஆணாக வாழ்க்கை வாழ்வது ரொம்ப சுலபம். ஆனால், பெண்களுக்கு அப்படி இல்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் மாத விலக்கினால் வழி அனுபவிக்க வேண்டும். மாதவிடாய் தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? உண்மையில் சொல்லப் போனால் அது மிகவும் புனிதமானது. கேரள சபரிமலை விவகாரத்தில் நான் முதல்வருக்கு ஆதரவாக இருக்கிறேன்’’என்று அவர் சொன்னது சர்ச்சையானது. 

இந்து அமைப்புக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. அதேபோல தற்போது தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விஜய்சேதுபதி, ’’இந்துக்கள் வழிபடும் கோவில் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வது பற்றி பேசியுள்ளார். ’’கோவில்களில் சாமி சிலைகளை அபிஷேகம் செய்யும் போது பக்தர்கள் அனைவரும் பார்க்கலாம். அபிஷேகம் செய்து முடிந்த பின் திரை மூலம் சாமி சிலை மூடப்படும். சிலை மூடப்படும் போது அந்த கோவிலில் இருந்த ஒரு சிறுமி அவள் என் தாத்தாவிடம் ‘எதற்காக சாமிகளை குளிக்கும்போது காட்டுகிறார்கள். 

துணி மாற்றும்போது மூடப்படுகிறது?’’ என்று சந்தேக கேள்வி கேட்பதாகவும், அதற்கு தாத்தா ’’சாமி குளிக்கும்போது காட்ட்டுவார்கள். உடை மாற்றும்போது மூடப்படும்’’என்று கூறுகிறார். அதற்கு அந்த சிறுமி , ‘’இந்து கடவுள் குளிக்கும்போது காட்டுவதை போல உடை மாற்றுவதையும் காட்டலாமே’’ என கிண்டலடிக்கும் விதத்தில்  பேசியுள்ளார். அந்தப்பேச்சு தற்போது விஜய் சேதுபதி மீது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.