why i choose bindhu for proposing task now harish kalyan reveals the secret
விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி போட்டியாளராக இணைந்தவர் ஹரீஷ் கல்யாண். வீட்டிற்குள் லேட்டாக எண்ட்ரி கொடுத்தாலும் ரசிகர்கள் மனதில் சீக்கிரமாக இடம்பிடித்து நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பிக்பாஸ் கொடுத்த ஒரு டாஸ்க் காரணமாக ஹரீஷ் பிந்து மாதவியிடம் ப்ரோபோஸ் செய்தார். மீண்டும் ஒரு டாஸ்க்கில் விளையாட்டாக பிந்து மாதவியின் கழுத்தில் ஹரீஷ் தாலி கட்டினார்.
இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் ஹரீஷ்-பிந்து என்ற பெயரில் ஆர்மி உருவானது. பிக்பாஸ் முடிந்து வெளியே வந்தபின்னர் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் வீட்டில் உள்ள மற்ற பெண்களை விடுத்து பிந்துவிடம் காதலை சொன்னதன் காரணம் என்ன? என கேள்வி எழுந்தது. இதற்கு நடிகர் ஹரீஷ் பதிலளித்தார். அவர் கூறும்போது " ஆர்த்தி,ஜூலி இருவரும் அப்போதுதான் வீட்டிற்குள் வந்தனர். அவர்களைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பதால் எனக்கு அவர்களிடம் ப்ரொபோஸ் செய்வதில் தயக்கம் இருந்தது.
சுஜா என்னைத் தம்பி என அழைத்ததால் அவரிடமும் என்னால் ப்ரொபோஸ் செய்ய முடியவில்லை. அதுபோல காஜலிடமும் என்னால் ப்ரொபோஸ் செய்ய முடியாது அதனால் தான் பிந்துவைத் தேர்ந்தெடுத்தேன்" என்று பதிலளித்திருக்கிறார்.
