அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. வீரம், வேதாளம் படங்கள் செம ஹிட் கொடுத்தது.

இப்போது தல கூட்டணியில் அவர் இயக்கியுள்ள மூன்றாவது படத்துக்கும் விவேகம் என பெயரிட்டுள்ளார். இந்த படமும் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த மூன்று படத்துக்கும் சிவா “வ” என்ற எழுத்து வரிசையில் டைட்டில் வைத்துள்ளதற்கு எதாவது செண்டிமெண்ட் இருக்கும் என நினைத்தவர்கள் பலர்.

இதுகுறித்து இயக்குனர் சிவா கூறியது:

“அஜித் சாரை மனதில் கொண்டு முதலில் கதை தயார் செய்வேன். பின் ஒன் லைனை அவரிடம் தெரிவிப்பேன். அவருக்கு பிடிக்கும் பட்சத்தில் அதை திரைக்கதையாக சொல்வேன். அவர் ஓகே சொன்னால் அடுத்த வேலைகளை துவங்கி விடுவேன்.

கதைக்கு பொருத்தமான டைட்டில்களை எழுதி அஜித் சார் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். அதில் கதைக்கு பொருத்தமானதை அவர் ஓகே செய்வார். இப்படித்தான் இதுவரை நடக்கிறது.

“வ” எழுத்து வரிசையில் படத்தலைப்பு வைத்திருப்பது திட்டமிட்டோ, செண்டிமெண்டோ அல்ல. எதார்த்தமாக அமைந்ததுதான்” என்று தெரிவித்தார்.