Why did the building kill the pyramid? I also know Give up the sir
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்று தெரிந்துக் கொள்ள பாகுபலி-2 படம் பார்க்க விடுமுறை வேண்டும் என தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளார்.
இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை பாகுபலி-2 திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது .

இது நாளை மறுநாள் உலகம் முழுவதும் சுமார் 9000 தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.
வெளியான முதல் நாளே, பாகுபலி 2 படத்தை பார்த்துவிட வேண்டும் என்பதற்காகவும், கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என தெரிந்து கொள்ளவும் டிக்கெட் முன் பதிவு செய்ய தியேட்டர்களில் கூட்டம் ஈயாய் மொய்க்கிறது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் தனக்கும் பாகுபலி – 2 படம் பார்க்க வேண்டும். அதனால், விடுமுறை வேண்டும் என்று உயரதிகாரிக்கு அப்பட்டமாக கடிதம் எழுதியுள்ளார்.
பட் அந்த காவலரோட நேர்மை நமக்கு பிடிச்சிருக்கு!
