மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது முதல் முறையாக தல அஜித்தை வைத்து ஒரு தமிழ் படம் தயாரிக்க இருக்கிறார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது முதல் முறையாக தல அஜித்தை வைத்து ஒரு தமிழ் படம் தயாரிக்க இருக்கிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

 இந்தப் படத்தை 'சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய, இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து, மிகப்பெரிய வெற்றி பெற்ற' பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் எடுக்கப்பட உள்ளது. இந்தபடத்தின் தொடக்க விழா கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. 

இதில் தயாரிப்பாளர் போனி கபூர் கலந்துகொண்டு பேசும்போது அஜித்தை பிங்க் படத்திற்காக தேர்வு செய்தது ஏன் என்கிற கேள்விக்கு விளக்கம் கூறினார்.

நடிகை ஸ்ரீதேவி "இங்கிலீஷ் விங்கிலீஷ்" படத்தில் அஜித்துடன் இணைந்து பணியாற்றியபோது. எங்களுடைய தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை, நல்ல கதை கிடைக்கவில்லை. பின் பிங்க் படத்தை தமிழில் தயாரிக்கலாம் என்ற என்னத்தை அஜித் தெரிவித்தார்.

அஜித் அந்தப் படத்தில் நடித்தால் அது ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என்று ஸ்ரீதேவியும் தன் எண்ணத்தை ஏற்றுக்கொண்டார். அவரின் ஆசை படியே தற்போது அஜித் நடிப்பில் இந்த படம் உருவாக உள்ளது.

மேலும் தமிழ் படம் தயாரிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். 'பிங்க்' திரைப்படம் போன்ற, சமூக அக்கறை கொண்ட படத்தை தமிழில் எடுப்பதிலும் அஜித்துடன் இணைந்து பணி புரிவதிலும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று போனி கபூர் தெரிவித்தார். அதே போல் மே மாதம் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.