why ajith will avoid bytes
அஜித் எந்த அளவிற்கு அன்பானவரோ அதே அளவிற்கு தவறு செய்தால் தண்டிக்கவும் துணிந்தவர். கடந்த சில வருடங்களுக்கு முன் 'ராஜா' படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுவுடன் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு காரணமாக பல வருடம் அவருடன் பேசாமல் இருந்து... சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு பிரச்னையின் போது வடிவேலு வந்து பேசியதும்தான் அவரும் பேசினார். இந்த தகவல் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு.
இது போல் தான் ஒரு பிரச்னை காரணமாக அனைத்து மீடியாக்களுக்கும் இனி எந்த பேட்டியும் தர மாட்டேன் என முடிவு செய்தார் .

அஜித் நடித்த ஆஞ்சனேயா படத்தின் வருகைக்கு முன் அஜித் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கண்டிப்பாக சூப்பர் ஸ்டார் இடத்தை நான் பிடிப்பேன் எனக் கூறினார்.
ஆனால் இதை பல ஊடகங்கள் அப்படியே மாற்றி, அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித் தான் என அவரே கூறி விட்டார் என்றவாறு செய்திகள் வெளியிட்டன. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் அஜித்தை எதிர்த்தனர். மேலும் இந்தப் பிரச்சனையின் போது வெளிவந்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வி அடைந்தது.

இதன் காரணமாக இனி எந்த மீடியாக்களுக்கும் பேட்டி கொடுப்பதில்லை என முடிவு செய்து தற்போது வரை அதையே பாலோ செய்து வருகிறார் அஜித்.
