Asianet News TamilAsianet News Tamil

நடிகர் விஜய் சேதுபதியை எட்டி உதைத்தது ஏன்..? எகிறி உதைத்தவர் அடுக்கிய காரணம்..!

இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய்சேதுபதியோடு புகைப்படம் எடுக்கும் முயற்சியில்தான் அவருடைய விஜய்சேதுபதி தரப்புக்கும் மகா காந்திக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

Why actor Vijay Sethupathi was kicked ..? The reason why the person who kicked..!
Author
Bangalore, First Published Nov 6, 2021, 11:04 PM IST

பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எகிறி எட்டி உதைத்த விவகாரம் தொடர்பாக அந்தத் தாக்குதலில் தொடர்புடைய நபர் போலீஸ் விசாரணையில் விளக்கம் அளித்துள்ளார். 

கடந்த 3-ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சூழ நடந்துசென்ற நடிகர் விஜய் சேதுபதியை, பின்னால் ஓடி வந்த ஒரு நபர் எகிறி எட்டி உதைத்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதி ஏன் தாக்கப்பட்டார் என்ற கேள்விகள் எழுந்தன. விஜய் சேதுபதி தாக்கப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி உண்மையில்லை என்று பெங்களூரு போலீஸார் விளக்கம் அளித்தனர். Why actor Vijay Sethupathi was kicked ..? The reason why the person who kicked..!

மேலும் விமான நிலையத்தில் விஜய் சேதுபதிக்கு வழி ஏற்படுத்தும் முயற்சியில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதுதான் தாக்குதல் நடந்ததாகவும் பெங்களூரு போலீஸார் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் தாக்குதல் நடத்தியவர் மகா காந்தி என்பது தெரிய வந்துள்ளது. நடிகர் விஜய்சேதுபதியோடு புகைப்படம் எடுக்கும் முயற்சியில்தான் அவருடைய விஜய்சேதுபதி தரப்புக்கும் மகா காந்திக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. Why actor Vijay Sethupathi was kicked ..? The reason why the person who kicked..!

இதுதொடர்பான பெங்களூரு போலீஸார் விசாரணையில் மகா காந்தி, தாக்கியது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளார். “அண்மையில் தேசிய விருது வாங்கிய விஜய் சேதுபதியிடம்  ‘விருது பெற்றதற்கு வாழ்த்துகள்’ என்றேன். மேலும் விஜய் சேதுபதியுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே என்னை அவர்கள் தாக்கினார்கள். அதனால்தான் நான் திருப்பி தாக்கினேன். இதுதொடர்பாக விமான நிலைய சிசிடிவி காட்சிகளை கேட்டுள்ளேன். அதன்மூலம் அவர்கள் என்னை தாக்கியதை நிருபிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். மழை விட்டாலும் தூவானம் விடாது என்பதுபோல பெங்களூரு தாக்குதல் சம்பவம் நீண்டுகொண்டே செல்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios