who will eliminated next? ganja karupa or baraniya?
கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக நடிகர் ஸ்ரீ உடல்நல குறைபாட்டால் வெளியேற்றப்பட்டார்.
இவர் வெளியேற்றப்பட்டதால், இந்த வாரம் எலிமினேஷன் இருக்காது என பலரும் எதிர்பார்த்த நிலையில், அனுயாவும் கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
தற்போது அடுத்தவாரம் இதில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் மீதம் உள்ள 13 போட்டியாளர்களும் நேற்று, தாங்கள் வெளியேற்ற நினைக்கும் நபர்கள் பற்றி பிக் பாஸ்ஸிடம் கூறினர்.
அதில் அதிகமாக ஓட்டுகள் பெற்று எலிமினேஷன் லிஸ்டில் உள்ள மூன்று நபர்கள் யார் என்று பார்க்கலாமா? 7 ஓட்டுக்கள் பெற்று நடிகர் பரணி முதலாவது இடத்திலும், 6 ஓட்டுக்கள் பெற்று இரண்டாவதாக நடிகர் கஞ்சா கருப்பும், 4 ஓட்டுக்கள் பெற்று மூன்றாவதாக நடிகை ஓவியாவும் உள்ளனர்.
