திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரணும், அவரது மனைவியும் சுவாமி தரிசனம்  செய்ய வந்திருந்தனர்.  திருப்பதி கோயிலுக்கு வந்த அவர்களுக்கு, தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். 

சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் காரில் ஏறிப் புறப்பட்ட ராம்சரணிடம், செய்தியாளர்கள் நடிகர் விஷால் அரசியலுக்கு வருவது குறித்து என்ன நினைகின்றீர்கள் என கேள்வி எழுப்பினர். 

அப்போது அவர், விஷால்னா யாரு? என்று பதில் கேள்வி  எழுப்பினார்.

பின்னர் சுதாரித்துக் கொண்டு, அண்டை மாநில அரசியல் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறி அந்த இடத்தை விட்டு நகரத்தார்.

விஷால் தமிழில் பல படங்களில் நடித்துள்ளது போல் தெலுங்கிலும் 'சத்யம்', சபா ஐயப்பா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இதன் மூலம் தெலுங்கிலும் நடிகராக அறியப்பட்ட விஷாலை தனக்கு தெரியாது என செய்தியாளர்களுக்குக் கூறி ராம்சரண் செம ஷாக் கொடுத்தார்.

இதாவது பரவாயில்லை, தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர், மற்றும் தயாரிப்பாளராக இருந்தும் விஷால் அண்டை மாநில நடிகர்களுக்கும் தெரியாமல் இருப்பது தான் கொடுமை.