விஜய்யுடன் கை கோர்க்கும் பிரபல ஹீரோயின்! - 'தளபதி-64' படம் குறித்து சூப்பர் அப்டேட்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் உருவான படம் 'பிகில்'. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 25ம் தேதி  வெளியான இந்தப் படம், திரையிடப்பட்ட அனைத்து ஏரியாக்களிலும் வசூலை வாரி குவித்து வருகிறது. 

இதுவரை, 'பிகில்' படம் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. வெளிநாடுகளில் மட்டும் சுமார் ரூ.50 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படி, தொடர்ந்து பிகில் படம் வசூல் வேட்டை நடத்திவரும் நிலையில், நடிகர் விஜய் தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். தற்போதைக்கு 'தளபதி-64' என அழைக்கப்படும் இந்தப் படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'மாநகரம்', 'கைதி' படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு அவர் இயக்கும் 3-வது படம் இதுவாகும். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக 'பேட்ட' புகழ் மாளவிகா மோகனன் நடிக்கிறார். 

பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த 'மக்கள் செல்வன்' விஜய்சேதுபதி, தளபதி-64ல் விஜய்க்கு எதிராக வில்லத்தனம் காட்டவுள்ளார். மேலும், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் மற்றும் சாந்தனு பாக்யராஜ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அவர்களின் வரிசையில், தற்போது 'தளபதி-64' படக்குழுவுடன் பிரபல நடிகை ஆண்ட்ரீயாவும் இணைந்துள்ளாராம். 

இந்தப் படத்தில் அவர் மிக முக்கிய ரோலில் நடிக்கிறாராம். விஜய்யின் 'பிகில்' வெளியான அதேநாளில்தான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான 'கைதி' படமும் ரிலீசானது. இந்தப்படமும், பாக்ஸ் ஆஃபிசில் பட்டைய கிளப்பி வருவதால், விஜய் ரசிகர்களிடையே லோகேஷ் கனகராஜ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது எனலாம்.