நடிகர் விஜய்க்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.அவருடைய  சின்ன வயது புகைப்படம் முதல் தற்போது வரை உள்ள பட டீசர் புகைப்படம் வரை வைரலாக பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து வரப்படுகிறது.

இந்நிலையில்,நடிகர் விஜய் சின்ன வயதில் ஒரு ஆறு மாத குழந்தையை தூக்கி வைத்துகொண்டு இருப்பார்.யார் அந்த குழந்தை என ஆர்வமாக பார்த்தால், அவருடைய தம்பி விக்ராந்த்.

தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள விக்ராந்த்,கிரிக்கெட் என்றால் அப்படி விளையாடுவார்.

நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கூட, விக்ராந்த் மிக சிறப்பாக விளைடாடி இருப்பார்.

இதெல்லாம் கடந்து தற்போது,விக்ராந்த் தான் 6 மாத குழந்தையாக இருக்கும் போது அவருடைய அண்ணனும் நடிகருமான விஜய் தன்னை தூக்கி வைத்திருக்கும்  போட்டோவை  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் விக்ராந்த் ...

அதில், " நான் 6 மாத குழந்தையாக  இருக்கும் போது என் இரண்டு அண்ணன்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்து  உள்ளார்.