இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் உலகநாயகன் கமலஹாசன் தங்க நிறத்தில் ஒரு பெட்டியை காட்டி, அதற்குள் கோல்டன்  டிக்கெட் ஒன்று இருப்பதாகவும் அதனை வென்றவர் இந்த வாரம் நாமினேஷன் மற்றும் எலிமினேஷன் செய்யப்பட மாட்டார்கள் என கூறி முதலாவதாக அனைவருக்கும் ஒரு டாஸ்க்  கொடுக்கப்படுகிறது.

அதில், போட்டியாளர்கள் அனைவரும் புரியாத ஒரு மொழியை பேசி, மற்றவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் முதலில் வையாபுரி பேசுகிறார், அதனை தொடர்ந்து பிந்து பேசுகிறார், அதனை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் பேசுகிறார்  ஹரிஷ் பேசும்போது... கமலும் அவர் பேசும் புரியாத பாஷையிலே ஹரிஷுக்கு பதில் கொடுக்கிறார்.

இன்றைய நிகழ்ச்சியில் யார் அந்த கோல்டன் டிக்கெட்டை கைப்பற்றி அடுத்தவாரம் எலிமினேஷனில் இருந்து தப்பிப்பார் என இன்றைய நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.