பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு இன்றுடன் 50வது நாளை எட்டுகிறது.  எனவே இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள், மக்கள் சற்றும்  எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தை இன்றைய நிகழ்ச்சியில் வைத்திருக்க பல வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட உள்ள போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

அதன்படி ஏற்கனவே இரண்டு முறை வெளியேற்றப்பட,  வாய்ப்புகள் இருந்தும் நூல் இழையில் காப்பாற்றப்பட்ட நடிகை சாக்ஷி தான் இந்த வாரம் வெளியேறுவார் என கூறப்படுகிறது. 

 பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதல்,  ஏதேனும் சில சண்டை சச்சரவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில்,  கடந்த வாரம் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை. எனவே மக்கள் மனதில் யாரைப்பற்றியும் பெரிய வெறுப்பு ஏற்படவில்லை.  

எனவே இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள சாக்ஷி, லாஸ்லியா,  அபிராமி ஆகியோரில், லாஸ்லியாவிற்கு  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால்,  அவர் இந்த வாரம் வெளியேற வாய்ப்பில்லை.  மேலும் சாக்ஷி அபிராமியை ஒப்பிட்டுப் பார்க்கையில்,  ரசிகர்கள் மனதில் சற்று குறைவான இடம்பிடித்துள்ளவர் சாக்ஷி மட்டுமே.  எனவே அவர் இவ்வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது.

எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்பட்டு, இன்றுடன் 50 வது நாள் என்பதால், எவிக்ஷனில் பிக் பாஸ் ட்விஸ்ட் வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.