பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களால் எதிர்பார்க்கப்பட்டவர்கள் வெளியில் செல்வதும், புறக்கணிக்கப்படுபவர்கள் போட்டியில் நீடிப்பது என எதிர்பார்க்காத பல திருப்பங்கள் அரங்கேறி வருகிறது.

மேலும் யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகை பிந்து மாதவி போட்டியாளராக, கலந்துகொண்டார். இந்நிலையில் தற்போது மூன்று நடிகைகளிடம் பிக் பாஸ் தரப்பினர் இந்த போட்டியில் கலந்துகொள்ளும் படி கூறி வருகின்றனராம்.

அதில், அட்டகத்தி, உப்பு கருவாடு, போன்ற படங்களில் நடித்த நடிகை நந்திதா, கும்கி படத்தில் அறிமுகமாகி பல வெற்றிப்படங்களில் கதாநாயகியாகவும், வேதாளம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்த லட்சுமி மேனன், மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து தற்போது "மேயாத மான்" படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி ஷங்கர் ஆகியவர்களில் ஒருவர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிக் பாஸ் போட்டியில் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.