தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். 

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக வளர்ந்து வரும் ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் 2 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

சென்னை தேனாம்பேட்டை, கேபி தாசன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 6.15 மணி முதல் 7.30 மணி வரை சோதனை நடைபெற்றது. சோதனையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண் PY-01 DC-1951 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சோதனை எதற்காக நடத்தப்பட்டது, எந்த வகையிலும் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ ஆவணம் வெளியாகவில்லை.

யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

ஆகாஷ் பாஸ்கரன், திரைப்படத் துறையில் தனது பயணத்தை உதவி இயக்குநராக தொடங்கியவர். தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தில் விக்னேஷ் சிவனுக்கு உதவியாளராக பணியாற்றியதில் இருந்து அவரது திரைப்பயணம் தொடங்கியது. பின்னர், 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'பாவ கதைகள்', 'அமரன்' போன்ற படங்களில் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றினார்.

முன்னணி நடிகர்களின் படங்கள் தயாரிப்பு

தற்போது ‘டான் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தனியார் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறது ஆகாஷ், தனுஷின் ‘இட்லி கடை’, சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார். அதுமட்டுமின்றி, அதர்வா – கயாடு லோஹர் நடிக்கும் ‘இதயம் முரளி’, சிம்பு நடிக்கும் 49வது படம் என முக்கியமான பல திரைப்படங்களையும் தற்போது தயாரித்து வருகிறார். மேலும், இன்னும் சில புதிய திட்டங்களை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.