நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் தான் என்று மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கு ஒருவழியாக  முடிவுக்கு வந்தது.

மேலூரை சேர்ந்த கதிரேசன் மீனாட்சி தம்பதியினர்,நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்றும்,அவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு  ஓடிவிட்டார் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும்,நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்பதால்,மாதம் ரூ.65,000 பராமரிப்பு தொகை வழங்க  வேண்டும் என தெரிவித்து  உள்ளார்.

இதற்கு எதிராக இந்த வழக்கை ரத்து செய்ய கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடிகர் தனுஷ் முறையிட்டார்.

இதனை விசாரித்த நீதிபதி தனுஷின் ஒரிஜினல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி மாற்று சான்றிதழ் விவரங்களை சமர்பிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.பின்னர் நடிகர் தனுஷ் சமர்ப்பித்த ஆவணங்களை ஏற்ற நீதிபதி,மேலூர் தம்பதியினர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில்,நடிகர் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் போலியானவை.போலியான  ஆவணங்களின் அடிப்படையில் தனுசுக்கு ஆதாரவாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

இதனால் இந்த  தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என மேலூர் தம்பதியினர் சென்னை உயர்நீதிமன்ற  மதுரை  கிளையில்  மனு கொடுத்தனர்.இதனை விசாரித்த நீதிபதி,மேலூர் தம்பதியினரின் மனு  விசாரணைக்கு ஏற்றதல்ல என தெரிவித்து, மனுவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.