Asianet News TamilAsianet News Tamil

பெயரை சொன்னால் துரோகம்! 25 லட்சம் கொடுத்தது யார்? மறைக்கும் ஆர். கே.செல்வமணி!

கொரோனா வைரலாசால் மக்களின் நலனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருபவர்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

who give the 25 laks rk selvamani speech
Author
Chennai, First Published Apr 9, 2020, 3:15 PM IST

கொரோனா வைரலாசால் மக்களின் நலனுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என்பதற்காக, மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருபவர்கள் பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் திரையுலகை நம்பி, பிழைப்பை நடத்தி வந்த... பெப்சி தொழிலாளர்களும் அடங்குவர். இந்நிலையில் பெப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரபல இயக்குனரும், பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்.கே.செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 

who give the 25 laks rk selvamani speech

இதனையடுத்து பல திரைப்பட பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் பணமாகவும், அரிசியாகவும் கொடுத்து அவர்களுக்கு உதவி வருகிறார்கள். அவ்வப்போது இது குறித்த செய்திகளும் சமூக வலைத்தளத்தில் வந்தவண்ணம் உள்ளது. 

மேலும் செய்திகள்: நடிகர் கிருஷ்ணாவுடன் சுனைனாவிற்கு திருமணமா? சந்திக்கு வந்த சமாச்சாரம்!
 

கடந்த ஓரிரு தினத்திற்கு முன் கூட, தல அஜித் பெப்சி தொழிலாளர்களுக்காக ரூ. 25 லட்சம் நிதி வழங்கினார். 

பெப்சி தொழிலாளர்களுக்கு கிடைத்து வரும் உதவி குறித்து பிரபல தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய, ஆர்.கே.செல்வமணி,  தொழிலாளர்களுக்கு உதவுவதற்கு மொத்தம்  மூன்றே முக்கால் கோடி ரூபாய் தேவைப்படுது. தற்போது வரை இரண்டரை கோடி ரூபாய் வந்துள்ளது. who give the 25 laks rk selvamani speech

இருக்கும் பணத்தை வைத்து  இதுவரை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்பட்டு வந்த  15,000 உறுப்பினர்களுக்கு உதவியுள்ளோம் . இன்னும் ஒன்றரை கோடி ரூபாய் பற்றாக்குறை  இருக்கிறது. தேவையான படம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையும் உள்ளது.

மேலும் செய்திகள்: பிரபல நடிகரின் மறைவில் போடப்பட்ட மூன்றே மாலை! ஊரடங்கள் வெறிச்சோடி காணப்பட்ட வீடு!
 

அதே நேரத்தில் , திரைத்துறையச் சேர்ந்த பிரபலம்  ஒருவர் ரூ.25 லட்சம் உதவி செய்து,  தன்னுடைய பெயர் வெளியில் சொன்னால் அது தனக்கு நீங்கள் செய்யும் துரோகம் என கூறியதால் அவருடைய பெயரை பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த 25 லட்சம் வழங்கியது யாராக இருக்கும் என பலரும் யோசித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios