Asianet News TamilAsianet News Tamil

நீ யார் ஆங்கிலம் பேச சொல்ல? வார்த்தையை பார்த்து யூஸ் பண்ணுங்க.. சித்தார்த்தை வச்சு செய்த சி.ஆர்.பி.எப் வீரர்!

நடிகர் சித்தார்த் தன்னுடைய பெற்றோரை, மதுரை விமான நிலையத்தில், துணை ராணுவ வீரர்கள் துன்புறுத்தியதாக சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ட்வீட் ஒன்றை போட்டிருந்த நிலையில், இவரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். இது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Who do you say speak English? CRPF soldier slam actor Siddharth
Author
First Published Dec 29, 2022, 5:51 PM IST

நடிகர் சித்தார்த்தின் பெற்றோரிடம் மதுரை விமான நிலையத்தில் பணியாற்றிவரும் துணை ராணுவ வீரர்கள், இந்தியில் பேச சொல்லி கொடுமை படுத்தியதாகவும்... அவர்கள் பையில் வைத்திருந்த சில்லறை காசுகளை எடுக்க சொல்லி சோதனை செய்ததோடு, வயதானவர்கள் என்றும் பார்க்காமல் 20 நிமிடம் காத்திருக்க செய்ததாக கூறி இருந்தார். மேலும் ஆங்கிலத்தில் அவர்கள் பேச மறுத்து விட்டதாக அடுத்தடுத்து, இவர் போட்ட பதிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்... சித்தார்த்தின் பதிவுக்கு  சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் வீடியோ மூலம் பதிலடிகொடுத்துள்ளார்.

இந்த வீடியோவில் கூறியுள்ளதாவது... 

எல்லோருக்கும் வணக்கம், இந்த பதிவு நடிகர் சித்தார்த் அவர்களுக்கு. நடிகர் சித்தார்த் அவர்களே நீங்கள் மதுரை விமான நிலையத்தில் துணை ராணுவ வீரர்கள், ஹிந்தியில் பேச சொல்லி துன்புறுத்தினார்கள் எனக் கூறி இருக்கிறீர்கள். எங்களை ஆங்கிலத்தில் பேச சொல்ல நீங்கள் யார்? துணை ராணுவ படையை ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று சொல்ல நீங்கள் யார் என்று நான் கேட்கிறேன்.

Who do you say speak English? CRPF soldier slam actor Siddharth

நாங்கள் பிரிட்டிஷ்காரர்களா அல்லது வெள்ளைக்காரர்களா? இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியை பேச சொன்னால் கண்டிப்பாக நாங்கள் பேசுகிறோம். தமிழில் பேச தான் தெரியும் என்று சொன்னால் அங்குள்ள தமிழ் அதிகாரி உங்களிடம் பேசுவார். தெலுங்கு தான் தெரியும் என்று கூறி இருந்தால்... அங்கிருக்கும் தெலுங்கு அதிகாரி உங்களிடம் பேசி இருப்பார். ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் பேசு என்று சொல்ல நாங்கள் என்ன வெள்ளைக்காரர்களா? வெள்ளைக்காரனே இங்கு வந்து ஹிந்தி தான் கற்றுக் கொண்டிருக்கிறான்.

இந்த பொங்கலை சும்மா செய்றோம்.. அஜித் - விஜய்க்கு ஒரே பேனர் வைத்து.. 'வாரிசு'-க்கு வாழ்த்து சொன்ன தல ரசிகர்கள்!

அதை போல் தன்னுடைய பெற்றோர் பையில் இருந்த சில்லறை காசுகளை எடுக்க சொன்னார்கள் என கூறியிருந்தீர்கள். அதை எந்த மொழியில் துணை ராணுவ வீரர்கள் கூறியிருந்தார்கள்? அதை எப்படி நீங்கள் புரிந்து கொண்டீர்கள்... அதை முதலில் சொல்லுங்கள். பின் எப்படி அதை புரிந்து கொண்டு நீ பதிவு போட்ட. வேலை இல்லாதவர்கள் துன்புறுத்தியதாக கூறி இருக்கிறீர்கள், நீ ரொம்ப வேலையில இருக்கியா? நீ என்னென்ன சிலுமிசம்... அட்டகாசம் பண்ணி இருக்க என... திரையுலகில் இருப்பவர்களுக்கு தெரியாதா? வேலையில் இருப்பவர்களை கண்ணியமாக பேச கற்றுக்கொள். அங்கு அவர்கள் டியூட்டி பார்க்கிறார்கள் அது அவங்களிடம் வேலை.

Who do you say speak English? CRPF soldier slam actor Siddharth

அவர்கள் இரண்டு மணி நேரம் நிக்க சொன்னாலும் நின்று தான் ஆக வேண்டும். முடிந்தால் அங்கிருந்து ஒரு எட்டு நீ போய் காட்டு? அப்படி உன்னால் போக முடியாது... ஏனென்றால் அது அவர்களின் பவர். அங்கு நிற்பவர்கள் கூழை கும்பிட்டு போட்டு போக அரசியல் வாதிகள் என நினைத்தாயா, எதற்கெடுத்தாலும் ஓகே சார் சரி.. சார் என சொல்ல... உங்கள் பெற்றோர் மட்டுமல்ல, அங்கு வேலை செய்பவர்களின் சொந்த பந்தங்கள், பெற்றோர் என யார் வந்தாலும் தங்களுடைய கடமையை அவர்கள் செய்வார்கள் தான்.

'தசாவதாரம்' கமல்ஹாசனை மிஞ்சிய சூர்யா..! 42-வது படத்தில் 13 கெட்டப்பில் நடிக்கிறாரா?

அதேபோல் அவர்களை ஆங்கிலத்தில் பேச சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்தி தெரியவில்லை என்றால் இந்தி தெரியாது என சொல்லுங்கள். ஆங்கிலம் தெரியாது என சொல்ல நாங்கள் எதற்கும் வெட்கப்படவில்லை தேவையில்லை. ஆங்கிலம் படிக்க வேண்டும் என்கிற அவசியமும் எங்களுக்கு இல்லை. இந்தி ஒரு அலுவல் மொழி,  தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளும் எங்களுக்கு தெரியும். இந்தியாவில் வாழும் அளவுக்கு எங்களுக்கு மொழி பேச தெரியும். நீ தான் வெளிநாட்டில் வெள்ளைகாரங்களுடன் சுற்றுபவன் எனவே உனக்கு தான் ஆங்கிலம் தெரிய வேண்டும். வார்த்தையை பார்த்து யூஸ் பண்ணுங்க. என உச்சரித்தபடி வீடியோ வெளியிட்டுள்ளார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios