அடுத்த வாய்ப்பு யாருக்கு... ஷாரூக்கானை போட்டி போட்டு சந்தித்த வெற்றி மாறன், அட்லீ...!

நடிகர் ஷாரூக்கான் நேற்று தனது 54வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக நேற்று மாலை தனது நெருக்கமான திரையுலக நண்பர்களுக்கு மட்டும், ஷாரூக்கான் பார்ட்டி கொடுத்தார். அதில் இயக்குநர் வெற்றி மாறனும், இயக்குநர் அட்லீ அவரது மனைவியுடனும் கலந்து கொண்டனர். இருவருடன் ஷாரூக்கான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இருவரில் யாருக்கு ஷாரூக்கான் அடுத்த வாய்ப்பு கொடுக்கப் போறாருங்கிற கேள்வி எழுந்திருக்கு. 

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் வெளியான "பிகில்" திரைப்படம் வசூலில் சக்கைப் போடு போட்டு வருகிறது. இதனையடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாரூக்கான் நடிக்க உள்ள இந்தி படத்தை அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியான. அந்த படத்திற்கு "சங்கி" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாரூக் பிறந்தநாளின் போது வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப்படம் குறித்து நேற்று எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான "அசுரன்" திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. வெற்றி மாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தை பார்த்த ஷாரூக்கான், அதில் சிவசாமி கேரக்டரில் நடிக்க விரும்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் பரவின. அந்த சமயத்தில அட்லீயை கலாய்ச்சி நிறைய மீம்ஸ்கள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாச்சு. ஆனால் ஷாரூக்கான் படம் பற்றி மூச்சுவிடாத வெற்றிமாறன், ஒரு பட்டாம்பூச்சி விற்பவன் என்ற கவிதைத் தொகுப்பை நடிகர் பரோட்டா சூரியை வைத்து படமாக எடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காரு. இந்த நிலையில ஷாரூக்கானின் அடுத்த படத்தை யாருதான் இயக்கப் போறாங்கன்னு ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.