இந்த வருட பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 'தர்பார்', 'பட்டாஸ்', 'பொன்மாணிக்க வேல்' மற்றும் 'சுமோ' ஆகிய நான்கு படங்கள் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை ஜனவரி 9 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதே போல் சூப்பர் ஸ்டார் மருமகன் தனுஷ் நடித்துள்ள, பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்த இரு படங்களின் ரிலீஸ் தேதிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 'சுமோ' , மற்றும் 'பொன்மாணிக்கவேல்' ஆகிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.  


 
மேலும் பொங்கல் ரேஸில் இன்னும் சில படங்களும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. எனவே பொங்கல் ரிலீசாக அறிவிக்கப்பட்ட படங்கள் சில பின்வாங்கவும் வாய்ப்புகள் அதிகம் என கிசுகிசுத்து வருகிறது கோடம்பாக்கம்.