தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் எதிர்பாராத பல திருப்பங்களை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர் தமிழக மக்கள்.

பல பிரபலங்கள் தமிழக முதலமைச்சராக மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்த நிலையில். ஆளுநர் வித்யா சாகர் ராவ் தற்போது வெளியிட்டுள்ள முடிவு பலரையும் அதிர்ச்சியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக தேர்வு செய்துள்ளதாகவும், இன்னும் 15 நாட்களில் அவர் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்ககத்தில் கருத்து கூறியுள்ள நடிகை ஸ்ரீ பிரியா.... அடுத்த 15 நாள் விடுமுறைக்கு நீங்கள் அனைவரும் செல்ல இருக்கும் இடம் எது என.... காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.