பிரபல பாடகி சுசித்ரா சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.

மேலும் தனுஷை தாக்கிப்  பல கருத்துக்களும் பதிவிடப்பட்டது, சுசி லீக்சில் சிக்கிய  அனைத்து நடிகைகளும் இது போன்ற தவறான புகைப்படங்களில் இருப்பது நாங்கள் அல்ல மார்பிங் செய்து இதுபோல் வெளியிடப்படுகிறது என கூறிவந்தனர்.

இந்த விஷயம் காட்டு தீ போல் பரவ, சுசி மன அழுத்தத்தில் உள்ளதாக அவரது கணவர் கார்த்திக்  கூறிவந்தார்.

இதை தொடர்ந்து ஒரு சில நாட்களின், தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசியே  வாய்ஸ் கால் மூலம் தெரிவித்தார்...

தற்போது சிகிச்சைக்காக, லண்டன் சென்றுள்ளதாக கூறப்படும் சுசித்ரா உண்மையில் எங்கு இருக்கிறார் என, சமூகவலைத்தளங்களில் பலர் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சுசி இதுபோன்றத்  தகவல்களை வெளியிட்டு வருவதால் அவரைக்  கடத்திவிட்டார்களா..? அல்லது மறைத்து வைத்துள்ளார்களா என குரல் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள் ...