நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டிக்கும் அவருடைய காதலர் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். 

நடிகையும் மாடலுமான, சனம் ஷெட்டிக்கும் அவருடைய காதலர் தர்ஷனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்ட நிலையில், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், தர்ஷன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே பெயில் வேண்டும் என தர்ஷன் நீதி மன்றத்தை அணுகிய போது இவருடைய வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் கடைசியாக காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த தர்ஷன், விசாரணை முடிந்த பின் அழுதபடியே வெளியேறியதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் சனம் ஷெட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது எந்த நடவடிக்கைகளும் எடுக்க படவில்லை என நடிகையின் தரப்பில் இருந்து கூறுகிறார்கள்.

தர்ஷன் எங்கு சென்றார் என்பதும் தெரியவில்லையாம், எனவே அவரை தேடி பிடித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காவல் நிலையத்தில் நின்று நியாயத்திற்காக போராடி வருகிறாராம் சனம் ஷெட்டி.