விவேகம் படம் எப்பொழுது வெளியாகும் என்பதுதான் ரசிகர்கள் மத்தியில் தற்போதுள்ள பெரும் குழப்பம். அந்த குழப்பத்தை போக்கி அக்ஷரா ஹாஸன், விவேகம் ரிலீஸ் தேதியை தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள விவேகம் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி ரிலீஸாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர். ஆனால் படம் ரிலீஸாவதற்கான வேலைகள் நடைபெறுகின்றனவா? என்பதுதான் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காதது, படத்தை ரிலீஸ் செய்யும் தேதியை தயாரிப்பாளர் தெளிவாக சொல்லாதது என குழப்பம் அதிகரித்து வந்த நிலையில் தல படம் ரிலீஸாகும் தேதியை உறுதியாக்கியுள்ளார் அக்ஷரா ஹாஸன்.

அவர், “விவேகம் படம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும்” என்று தனது டிவிட்டரில் பக்கத்தில் தெரிவித்து குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தெளிவை ஏற்படுத்தியுள்ளார்.