சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற நிலையில், உடல் பரிசோதனை முடிந்து, எப்போது சென்னை திரும்புகிறார் என்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்ற நிலையில், உடல் பரிசோதனை முடிந்து, எப்போது சென்னை திரும்புகிறார் என்பது குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு 2016ம் ஆண்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ மருத்துவமனையில் சிறப்பு மருந்துவர்கள் குழு ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இதையடுத்து ரஜினிகாந்த் ஆண்டு தோறும் அமெரிக்காவிற்கு உடற்பரிசோதனைக்காக சென்று வருவது வழக்கம். ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டு அமெரிக்கா செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் 'அண்ணாத்த' பட ஷூட்டிங்கின் போது உடல் நலக்குறைவு ஏற்பட்ட ரஜினிகாந்த், சில மாத ஓய்விற்கு பிறகு படப்பிடிப்பிலும் பங்கேற்றார். 

இதே சமயத்தில் அமெரிக்காவிலும் கொரோனா தொற்று குறைந்தது. இருப்பினும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தனி விமானம் மூலமாக ஜூன்19 ஆம் தேதி அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இவருடன் இவருடைய மனைவி லதா ரஜினிகாந்தும் சென்றார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' படத்தில் நடிக்க கடந்த பிப்ரவரி மாதமே அமெரிக்க சென்ற நிலையில், அவரது மனைவி ஐஸ்வர்யா மற்றும் மகன்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்தனர். எனவே ஐஸ்வர்யா தான் தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை பக்கத்திலேயே இருந்து கவனித்து கொண்டு அனைத்து உதவிகளையும் செய்தார். தந்தை ரஜினிகாந்துடன் மயோ கிளினிக் விட்டு இவர் வெளியே வந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இந்நிலையில் சற்று முன் வெளியாகியுள்ள தகவலில், தலைவர் ரஜினிகாந்த் பூரண உடல் பரிசோதனை முடிந்த நிலையில் நாளை சென்னை திரும்ப உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் D43 ஷூட்டிங் பணிக்காக ஹைதராபாத் வந்து விட்ட நிலையில், நாளை தலைவருடன் அவரது மகள், மற்றும் பேரன்கள் சென்னை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.