ஷாருக்கானுடன் அட்லீ இணைய உள்ள படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

ஷாருக்கானுடன் அட்லீ இணைய உள்ள படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் 'ராஜா ராணி' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில், என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். என்னதான் அட்லீ மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. 

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமா கால் பாதிக்க ஆயத்தமாகியுள்ளார். அந்த வகையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்கான கதையையும், ஷாரூக்கானிடம் கூறி அட்லீ சம்மதம் வாங்கி விட்டதால், இன்னும் ஓரிரு மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது... கொரோனா கொரோனா கோரத்தாண்டவம், முதல் அலையை தொடர்ந்து, இரண்டாவது அலையை வீசி வருவதால் எடுத்து முடிக்கப்பட்ட படங்களே, இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. அதே போல், பல முன்னணி நடிகர்களின் படங்களின் ஷூட்டிங் பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் படம் இந்த ஆண்டின் இறுதிக்கு நகர்த்துள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி "ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஷாருக்கான் தற்போது ’பதான்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்து விடும் என்றும் அதன்பின் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது".